தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடைசியாக ஜூலை மாதம் கூடியது. சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் முடிந்த ஆறு மாதங்களுக்குள் அடுத்த கூட்டத்தொடர் கூட்டப்பட வேண்டும் என்பது விதியாகும்.
எப்போது கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை? - தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரியில் கூடுகிறது
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை ஜனவரி 6ஆம் தேதி கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2020ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை வரும் ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் ஆற்றும் உரையில், அரசின் செயல்பாடுகள் குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் பேசுவார். அதைத்தொடர்ந்து கூட்டத் தொடரானது நடக்கவுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பன உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சியினர் கையில் எடுப்பார்கள் எனத் தெரிகிறது.