சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மே 05) பல பன்னாட்டு நிறுவனங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி-பதில் நேரத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, 'திருவள்ளூர் மாவட்டம் தொழிற்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. பாதுகாப்புத்தொழில் வழித்தடமாகவும் திருவள்ளூர் மாவட்டம் விளங்குகிறது.