சென்னை: தட்ப வெப்பநிலையைத் தாங்கும் பசுமை கோயில்களாக மதுரை, சென்னையில் தலா ஒன்று என இரண்டு கோயில்களில் முன்னோடி திட்டமாக எடுத்துக்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றக் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்களின் தட்ப வெப்பநிலை தணிப்பு மற்றும் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாதிரி செயல்விளக்கம் செய்வதற்காக மதுரை, சென்னையில் தலா ஒன்று என மொத்தம் இரண்டு கோயில்களில் முன்னோடி திட்டமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இத்திட்டத்தில் சூரியசக்தி விளக்குகள், நீர் மேலாண்மை, வெப்ப மேலாண்மை, பசுமையாக்குதல், கோயில் குளங்களில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, நெகிழி மற்றும் நுண் நெகிழி அகற்றுவதற்கான செயல்பாடுகள் ஆகியவை அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.