சென்னை:கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (மே 13) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் தொடங்கியது.
இந்த கூட்டத்திற்கு பின்னர், கரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர் பாலு, ஆர்.எஸ் பாரதி; அதிமுக தரப்பில் ஜெயக்குமார், வேடச்சந்தூர் பரமசிவம்; காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதாரணி, விசிக எம்எல்ஏக்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ் பாலாஜி; மதிமுகவில் சின்னப்பா, பூமிநாதன்; பாஜகவிலிருந்து நயினார் நாகேந்திரன், எம்.என் ராஜா; சிபிஎம் கட்சியிலிருந்து மாரிமுத்து, தளி ராமச்சந்திரன், சிபிஐ தரப்பில் மாலி, சின்னதுரை; மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக்கட்சியில் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி தரப்பில் ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
தளர்வுகளை பயன்படுத்தி சிலர் ஊரடங்கினை தவறாக பயன்படுத்துகின்றனர். இத்தளர்வுகளை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பதையும், மேலும் நல்ல ஆலோசனைகளையும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் வழங்கவும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் இதுவரை 94 போலீசார் உயிரிழப்பு