தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி - ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

சென்னை: டெல்லியில் மக்கள் போராட்டமே நடந்திடாமல் நல்லாட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்.

aap press meet
aap press meet

By

Published : Dec 13, 2019, 5:40 PM IST

சென்னையில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் வசீகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ' தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியலை மக்கள் எதிர்பார்க்கின்றனர். லஞ்சம், ஊழலை ஒழித்து, நேர்மையான ஆட்சியைக் கொடுக்கிறோம் என்று சொல்பவர்கள் யாரும் அப்படி நடந்துகொள்ளவில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

ஆனால், அப்படி ஒரு நல்லாட்சியை டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்து வருகிறார். அவரின் ஆட்சியை பல மாநிலங்கள் முன் மாதிரியாக இன்று எடுத்துக் கொண்டுள்ளன.

மக்கள் போராட்டமே நடந்திடாத ஆட்சி என்றால், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஆட்சிதான். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. இத்தேர்தலில் நல்லவர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் என அனைவரையும் அரவணைத்துச் செல்ல உள்ளோம் ' எனக் கூறினார்.

வசீகரன், மாநிலத் தலைவர், ஆம் ஆத்மி கட்சி

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட தொகுதி உடன்பாடு!

ABOUT THE AUTHOR

...view details