சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோயிலுக்கு இன்று தெலங்கானா ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் வழிபாடு செய்ய வந்திருந்தார்.
'அனைத்துக் கட்சியினர் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது' - தமிழிசை பூரிப்பு! - பொதுமக்கள்
சென்னை: ஆளுநர் பதவியேற்புக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என எல்லோருடைய வாழ்த்துகளையும் பெற்றிருப்பது தமிழ்ப் பெண்ணாக மகிழ்ச்சி அளிப்பதாக தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, ' தன் தந்தை குமரி அனந்தன் திருவொற்றியூர் எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்தில் இருந்து வடிவுடை அம்மன் கோயிலுக்கு வரும் பழக்கம் உள்ளது. தன் வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் திருவொற்றியூர் அம்மனின் ஆசையை வாங்கித்தான் சென்றிருப்பதாகவும்' தெரிவித்தார்.
மேலும், 'தெலங்கானா ஆளுநராக வரும் 8ஆம் தேதி பதவி ஏற்பதால், அதற்கான முழு அருள், ஆசியை வேண்டி இந்த கோயிலுக்கு வந்தேன். பதவியேற்பு விழாவில் எல்லா முக்கியமான தலைவர்களும் வருவர். ஆளுநர் பதவி கிடைத்ததற்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என எல்லோருடைய வாழ்த்துகளையும் பெற்றிருப்பது, ஒரு தமிழ்ப் பெண்ணாக மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக' தமிழிசை கூறினார்.