தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயாரும், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிகாலை காலமானார்.
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் அவர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, ஆகஸ்ட் 19ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
தாய் குறித்து மனமுருகி ட்வீட்
அன்றைய தினம் தனது தாயார் மறைவு குறித்து தமிழிசை ”என்னை பார்த்துப் பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் என்னை விட்டுப் பிரிந்தார்” எனப் பகிர்ந்த பதிவு பலரையும் கவலையில் ஆழ்த்தியது.
தாய் அனந்தகுமாரியின் இறுதிச்சடங்கை முடித்து குடும்பத்துடன் தமிழிசை சௌந்தரராஜன் இந்நிலையில் இறுதிச்சடங்குகள் அனைத்தும் முடிவடைந்து, இன்று தமிழிசை பகிர்ந்துள்ள மற்றொரு பதிவில், “என்னை உடலோடு கலந்து பெற்ற அன்னை, இன்று கடலோடு கலந்தார்கள்... அஸ்தியைக் கரைத்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டோம். அம்மாவிற்கு பிடிக்காததை நான் செய்தது கிடையாது. அழுதால் அம்மாவிற்கு பிடிக்காது. ஆனாலும் அழுது முடித்து விட்டோம்.
விழிகளில் கண்ணீர் வேண்டாம், வழிகாட்டுவார்கள் அம்மா என்ற நம்பிக்கையுடன், வெற்று உணர்வுகள் இருந்தாலும், அது அம்மாவிற்கு பிடிக்காது என்பதால், அம்மாவிற்கு பிடித்த வெற்றி உணர்வோடு வாழ்க்கை பயணத்தை தொடர்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட் இதையும் படிங்க:நடிகை நல்லெண்ணெய் 'சித்ரா' மாரடைப்பால் மறைவு