தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்! - தமிழிசை - தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்! தமிழிசை

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்தபோது, தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும் என உறுதிபடத் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்! தமிழிசை

By

Published : Apr 19, 2019, 11:48 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர் ‘தேர்தல் வழிமுறைகள், ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன் நடந்த பணப்பட்டுவாடாவைத் தடுத்து இருக்க வேண்டும். திமுக கூறுவது போல வாக்கு மையத்தில் குளறுபடி என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தோல்வி பயத்தினால் உளறுகிறார் ஸ்டாலின்.

தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

கனிமொழி பற்றி டிவிட்டரில் கூறிய தவறான கருத்திற்கு நான் கண்டனம் தெரிவித்திருக்கிறேன். பெண் தலைவரைப் பற்றி தவறாகப் பேசியதற்கு நான் கண்டனம் தெரிவித்துள்ளேன். நான் யாரையும் தரக்குறைவாகக் கனிமொழி சொல்வது போலப் பேசியது இல்லை. வாக்குக்குப் பணம் கொடுத்து, மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொள்வது தவறு’ என்று பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details