தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கனிமொழியை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழ் தெரிந்த அலுவலர்கள்! - திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி

சென்னை: தூத்துக்குடி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த கனிமொழியை, தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர்.

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி
திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி

By

Published : Aug 24, 2020, 12:47 PM IST

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை விமான நிலையம் சென்றபோது பெண் பாதுகாவலர் ஒருவர் அவரிடம் இந்தி தெரியாததால், நீங்கள் இந்தியரா? என்ற ரீதியில் கேள்வி எழுப்பியதாக வெளியான செய்தி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து கனிமொழி தனது ட்விட்டரில், “தனக்கு இந்தி தெரியாது என்பதால் சி.ஐ.எஸ்.எஃப். படை அலுவலரிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டதற்கு அவர் நீங்கள் ஒரு இந்தியரா என்று கேட்டார். அதனால், இந்தி தெரிந்திருந்திருப்பது என்பது இந்தியன் என்பதற்குச் சமமா?” எனக் கூறி #hindiimposition என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எஃப். தரப்பு, ‘இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் திணிப்பது எங்கள் கொள்கை இல்லை’ என்று விளக்கம் அளித்தது. அதற்குக் கனிமொழியும் நன்றி தெரிவித்திருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கனிமொழியை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழ் தெரிந்த அலுவலர்கள்

இந்நிலையில், இன்று காலை கனிமொழி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த கனிமொழியை, தமிழ் தெரிந்த மத்திய தொழிற்படைப் பாதுகாப்புப் படையினரே உள்ளே அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: உதயநிதியின் மண் பிள்ளையார் ட்வீட்: இது திமுகவில் முதல்முறை!

ABOUT THE AUTHOR

...view details