தமிழ்நாடு பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை(ஏப்ரல்.03) முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.