சென்னை: வட உள் கர்நாடகாவிலிருந்து தென் தமிழ்நாடு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று(பிப்.22) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.
23.02.2022: தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.
24.02.2022:தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.
25.02.2022:தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.