சென்னை:கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(பிப்.14) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் நாளை(பிப்.15) மற்றும் நாளை மறுநாள்(பிப்.16) தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.