தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு... முழுத்தகவல் உள்ளே... - TN Urban Local Body Polls 2022

தமிழ்நாட்டில் பிப். 19 காலை ஏழு மணிக்குத் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மாலை ஆறு மணிக்கு நிறைவடைந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப். 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Tamil Nadu Urban Local Body Election poll Highlights
Tamil Nadu Urban Local Body Election poll Highlights

By

Published : Feb 20, 2022, 1:03 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப். 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் குறித்த முழு விரவங்களை இங்கு காணலாம்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள்

  • மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 21
  • மொத்த மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை - 1,373
  • மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை - 138
  • மொத்த நகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை - 3,842
  • மொத்த பேரூராட்சிகளின் எண்ணிக்கை - 489
  • மொத்த பேரூராட்சி வார்டுகளின் எண்ணிக்கை - 7,605
  • மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை - 30,735
  • மொத்த வாக்கு எண்ணிக்கை மையங்கள் - 268
  • போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை - 57,746
  • போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் - 218
  • வேட்புமனு தாக்கல் இன்மை - 1
  • அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிட்ட வார்டுகள் - சென்னை மாநகராட்சி 190, 192ஆவது வார்டு
  • குறைந்தபட்ச வேட்பாளர்கள் போட்டியிட்ட வார்டுகள் - 1,714
  • 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்ட வார்டுகளின் - 34
  • மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 2.83 கோடி(ஆண்கள் -1,38,72,328, பெண்கள் - 1,44,59,303, மூன்றாம் பாலினம் - 4702)

தேர்தல் மற்றும் பாதுகாப்பு பணிகள்

  • வாக்குச்சாவடிப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் எண்ணிக்கை - 1.32 லட்சம்
  • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எண்ணிக்கை - 648
  • உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எண்ணிக்கை -1,642
  • பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் - 5,920
  • சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட வாக்குச்சாவடிகள் - 25,735
  • நியமனம் செய்யப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் ( Election Observer ) - 41
  • நியமனம் செய்யப்பட்ட வட்டார பார்வையாளர்கள் ( Block Observer )-697
  • நியமனம் செய்யப்பட்ட நுண்பார்வையாளர்கள் ( Micro Observer ) -1892
  • மொத்தம் பறக்கும் படைகளின் எண்ணிக்கை - 1695
  • பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் எண்ணிக்கை - 1 லட்சம்

தேர்தல் ரத்து மற்றும் ஒத்திவைப்பு

  • தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு தேர்தல் ரத்து.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி வார்டு 36 தேர்தல் ஒத்தி வைப்பு
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சி வார்டு 19 தேர்தல் ஒத்தி வைப்பு
  • விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு தேர்வுநிலை பேரூராட்சி வார்டு 2 தேர்தல் ஒத்தி வைப்பு
  • ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அத்தாணி பேரூராட்சி வார்டு 3 மற்றும் அம்மாபேட்டை பேரூராட்சி வார்டு 2 தேர்தல் ஒத்தி வைப்பு
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை பேரூராட்சி வார்டு 9 தேர்தல் ஒத்தி வைப்பு

வாக்கு எண்ணிக்கை

  • தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 22.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று 268 மையங்களில் எண்ணப்படும்.
  • சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15 இடங்களில் எண்ணப்படும்.
  • தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 2-03-2022 அன்று பதவியேற்றுக் கொள்வார்கள்.
  • மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும்
  • மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மார்ச் மாதம் 4 தேதி முதல் நடைபெறும்.

இதையும் படிங்க:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

ABOUT THE AUTHOR

...view details