தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022: வாக்குப்பதிவு தொடங்கியது - Urban Civic Polls LIVE

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. 1 லட்சத்து 13 ஆயிரத்து 73 காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

tamil-nadu-urban-civic-polls-voting-2022
tamil-nadu-urban-civic-polls-voting-2022

By

Published : Feb 19, 2022, 7:01 AM IST

சென்னை:தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,838 பதவிகளுக்கு 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடைபெற ஏதுவாக 1,343 நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைந்துசென்று தீர்வு காணும் வகையில் 846 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை, ஆயுதங்கள் கடத்துவது, சம்பந்தமில்லாத நபர்கள் நடமாட்டம் உள்ளிட்டவையை கண்காணிக்க 455 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 73 காவலர்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டும் ஆயுதப்படையினைச் சேர்ந்த 17 ஆயிரத்து 788 காவல் அலுவலர்கள், 71 ஆயிரத்து 74 ஆண், பெண் காவலர்கள், தமிழ்நாடு சிறப்புப் படையைச் சேர்ந்த ஒன்பதாயிரத்து 20 காவலர்கள் உள்பட 97 ஆயிரத்து 882 காவலர்கள், 12 ஆயிரத்து 321 ஊர்க்காவல் படையினர், இரண்டாயிரத்து 870 முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற காவலர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 73 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க ஏதுவாக வாக்குசாவடிக்களுக்கு அருகேலேயே காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டாஸ்மாக கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:'திமுக கோவை கோட்டையை முற்றிலுமாக கைப்பற்றிவிட்டது!'

ABOUT THE AUTHOR

...view details