தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்" - ஸ்டாலின் வேண்டுகோள் - "Tamil Nadu uniform staff selection should be postponed" - MK Stalin

சென்னை: "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக நடைபெறவுள்ள தேர்வினை கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை குறையும்வரை ஒத்திவைக்க வேண்டும்" என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வை ஒத்திவைக்கக்கோரி  ஸ்டாலின் அறிக்கை
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வை ஒத்திவைக்கக்கோரி ஸ்டாலின் அறிக்கை

By

Published : Apr 17, 2021, 1:31 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) சார்பாக, இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10 ஆயிரத்து 906 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல். 21ஆம் தேதிமுதல் ஒரு வார காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும், நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், இத்தேர்வினை நடத்துவது என்பது கரோனா பரவல் மேலும், அதிகரிக்கவே அதிக வாய்ப்பினை உருவாக்கும்.

திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இத்தேர்வினை ஒத்திவைப்பதே சரியான முடிவாக இருக்கும்.

தேர்வை ஒத்திவைக்க வேண்டும்

எனவே, இந்த உடற்தகுதி தேர்வினை, இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை குறையும்வரை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "சாதனைகள் படைக்க வேண்டிய விவேக்கை இயற்கை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ"

ABOUT THE AUTHOR

...view details