சென்னை:ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதான தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
44 பேர் தேர்வு
ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு அன்றைய நாளில் தேசிய, மாநில அரசின் விருதுகள் வழங்கப்படுகிறது.
தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியல் மத்திய கல்வி அமைச்சகம் 'தேசிய நல்லாசிரியர் விருது' பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்த ஆசிரியர்களின் பட்டியலில் 44 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பள்ளி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய நல்லாசிரியர் விருது
சிறந்த ஆசிரியராக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதியில், மத்திய அரசு விருது வழங்குவது, நன்முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை சிறப்பிக்கும் நிகழ்வாகும்.
கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, அந்தந்த மாவட்டங்களில் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் காணொலி வாயிலாக குடியரசுத் தலைவர் விருதினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி வருகிறது.
44 பேர் தேர்வு
'தேசிய நல்லாசிரியர் விருது' வழங்குவதற்கு இந்தாண்டு 44 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியல் தமிழ்நாட்டில் இருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
செப். 5ஆம் தேதியில் விருது
புதுச்சேரியில் இருந்து ஸ்ரீ ஜெயசுந்தர் மணப்பேடு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியரும் தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறந்த ஆசிரியருக்கான 'தேசிய நல்லாசிரியர் விருதை' வழங்க உள்ளார்.
இதையும் படிங்க: 'பள்ளிகள் திறப்பு: 50 விழுக்காடு மாணவர்களுடன் இயங்கலாம்'