சென்னை:தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் தொற்று இரண்டு வாரங்களில் போட்ஸ்வானா, ஹாங்காங், பிரிட்டன், இந்தியா, சீனா என 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. ஒமைக்ரான், கரோனா தொற்றைவிட வேகமாக பரவும் தன்மை கொண்டால். உலக நாடுகள் பீதியில் உள்ளன. இதன்காரணமாக சீனா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் தொற்றில் தமிழ்நாடு மூன்றாம் இடம்
இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 236 பேருக்கு உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சூழலில், பரவல் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படலாம் என்று செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொற்று பரவலால் விடுமுறை அளிக்கும் சூழல் ஏற்பட்டால் அரசு அறிவிக்கும். சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு