தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீண்டும் ஒரு வாரம் விடுமுறை? - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - பள்ளிகள் மீண்டும் ஒரு வாரம் விடுமுறை

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

By

Published : Jan 23, 2022, 10:41 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் இறுதிவரை விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி பிப்ரவரி ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்க இருந்தன. தற்போது இந்த விடுமுறையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மாணவர்கள் கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும், பள்ளிகள் திறக்கும் வரையில் ஆன்லைன் முறையில் கல்வி கற்குமாறும் அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details