தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 6 ) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக பரப்புரையைத் தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்தது.
இந்த நிலையில் இன்று மாலை 7 மணிவரை தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவித்திருந்தார். வழக்கமாகத் தேர்தல் பரப்புரை இறுதிநாளில் மாலை 5 மணியுடன் பரப்புரை முடிவடையும்.
ஆனால் இந்த முறை 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கி, மாலை 7 மணி வரை அனைத்து அரசியல் கட்சிகளும் பரப்புரை மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
கட்டுப்பாடுகள் தீவிரம்
மேலும் இது தொடர்பாகப் பேசியுள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, "இன்று இரவு 7 மணிக்கு மேல், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற வேண்டும். தேர்தல் தொடர்பான ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது. இன்று இரவு 7 மணிமுதல் வாக்குப்பதிவு முடியும் வரை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.