சென்னை:கோவிட் தொற்று பரிசோதனை குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சளி காய்ச்சல் தொண்டை வலி மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்ட நபர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினை உடையவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்களில் இரண்டு விழுக்காட்டினர் ரேண்டம் (சமவாய்ப்பு) முறையில் பரிசோதிக்கப்படுவர்.