தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு காவல்துறையில் அதிரடி மாற்றம்!

சென்னை: சென்னை மேற்கு மண்டல காவல்துறை இணை ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tamil Nadu Police  higher offcials changed in chennai!
Tamil Nadu Police higher offcials changed in chennai!

By

Published : Jul 26, 2020, 6:41 AM IST

இது குறித்து தலைமைச் செயலக கூடுதல் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த அரசாணையில், "சென்னை வேப்பேரி சரகத்தில் துணை காவல் ஆணையராக பணியாற்றிவந்த கே.மகேஸ்வரி, சென்னை மேற்கு மண்டல காவல்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் தலைமை அலுவலக இணை ஆணையராக மல்லிகா, நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் காவல் துணை கண்காணிப்பாளர், இணை ஆணையராக பணியாற்றிவந்த 14 பேருக்கு காவல் இணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது". இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details