சென்னை:தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், பிஹெச்டி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியுடன் முழுநேரம் மற்றும் பகுதிநேரம் முனைவராய் பட்டப் படிப்பு நேரடி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 2021 பருவச் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொருளியல், மேலாண்மையியல், கல்வியியல், விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், புவியியல், ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன், கணினி அறிவியல், தமிழ், குற்றவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பிஹெச்டி ஆய்வுப் படிப்பு மேற்கொள்ளலாம்.