தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடைபாதையில் கிடக்கும் பால் பாக்கெட்டுகள் - ஆவின் நிறுவனத்தின் நிர்வாகச் சீர்கேடுதான் காரணம்

பால் விநியோகம் செய்யும் வாகன ஓட்டிகள் தயவு தாட்சண்யம் பாராமல், நடைபாதையில் பால் பாக்கெட்டுகளை கொட்டிச் செல்வதற்கு ஆவின் நிறுவனத்தின் நிர்வாகச் சீர்கேடுதான் காரணம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

சாலையில் கொட்டப்பட்ட பால் பாக்கெட்டுகள்
சாலையில் கொட்டப்பட்ட பால் பாக்கெட்டுகள்

By

Published : Nov 10, 2021, 9:55 PM IST

சென்னை:நிர்வாகச் சீர்கேடு காரணமாக நடைபாதையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்படுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாதாந்திர அட்டை மூலம் ஆவின் பால் வாங்கிட முன் பணம் செலுத்திய மக்களுக்குப் பால் வழங்குவதற்காக 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டப்புகள் சம்பந்தப்பட்ட பூத்துகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் சம்பந்தப்பட்ட பூத்துகளில் பணியமர்த்தப்பட்டு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யும் வேலையில், ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு பணியில் இருக்கும் ஊழியர்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் நுகர்வோர் பாலினை வாங்க வேண்டும்.

நிர்வாகச் சீர்கேடு

சம்பந்தப்பட்ட பூத்துகளில் ஒப்பந்த வாகனங்கள் மூலம் இறக்கப்பட்ட ஆவின் பாலினை ஒரு மணி நேரத்திற்குள் காலி செய்துவிட வேண்டும். இல்லையெனில் வாகன ஓட்டிகள் தயவு தாட்சண்யம் பாராமல் நடைபாதையிலேயே பால் பாக்கெட்டுகளை கொட்டி விட்டுச் சென்று விடுவர். இதற்கு ஆவின் நிறுவனத்தின் நிர்வாகச் சீர்கேடுதான் முழுக்காரணமாகும்.

சாலையில் கொட்டப்பட்ட பால் பாக்கெட்டுகள்

ஆவின் பூத்துகளில் பால் விநியோகம் செய்யப்படுவதை முறையாக கண்காணிக்காமலும், பால் விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்புகளை பற்றாக்குறையோடு வைத்துக்கொண்டும் பெயரளவில் நித்தமும் வெற்று அறிக்கைகளை மட்டுமே ஆவின் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:லஞ்சம் வாங்கிய ஆவின் உதவி பொது மேலாளர் - கையும் களவுமாக சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details