தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஃபிளக்சிபில் அண்ட் டைனமிக் முதலமைச்சர்... ஸ்டாலினைப் பாராட்டிய ஆளுநர்!' - தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்

தமிழ்நாடு ஆளுநருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்குமான உறவு சுமுகமாக உள்ளது எனச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

By

Published : Jan 3, 2022, 5:32 PM IST

சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை வருகிற 5ஆம் தேதியுடன் தொடங்கவுள்ளது. இந்நிலையில் கலைவாணர் அரங்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி, பேரவைச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இன்று (ஜனவரி 3) ஆய்வுசெய்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அப்பாவு, “வரும் 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. மேலும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்தும் கூட்டம் நடைபெற உள்ளது.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம்

அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கக் கூடிய ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், காவல் துறையினர் என அனைவருக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாகக் கூட்டம் நடைபெறும்.

சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்பும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தப் பணிகள் முடிந்தவுடன் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும். ஆளுநருக்கு சட்டப்பேரவை மரபின் அடிப்படையில் நேரில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரைப் பாராட்டிய ஆளுநர்

தமிழ்நாடு ஆளுநருடனான சந்திப்பின்போது தமிழ்நாடு முதலமைச்சரை அவர், ஃபிளக்சிபில் முதலமைச்சர், டைனமிக் முதலமைச்சர், சின்சியர் முதலமைச்சர் எனப் பாராட்டினார். மேலும் மழை வெள்ள பாதிப்பு நேரங்களில் நேரடியாகக் களத்திற்குச் சென்று பணிகளைத் துரிதப்படுத்தியதையும் பாராட்டினார். எனவே ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையேயான உறவு சுமுகமாக உள்ளது.

ஆளுநர் உரையை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் பார்க்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறையும் காகிதம் இல்லாத கூட்டம் நடைபெறும். சபாநாயகராகப் பணியாற்றினாலும் என்னை வாக்களித்துத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் சட்டப்பேரவையில் கேட்பேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மழை பாதிப்பு: ஐஏஎஸ் திருப்புகழ் குழு ஸ்டாலினிடம் அறிக்கைத் தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details