தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு சட்டப்பேரவையும், சீர்திருத்தச் சட்டங்களும் - ஓர் பார்வை - Tamil Nadu Legislative

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா இன்று (ஆக 2) கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டின் வேறு எந்த மாநிலங்களிலும் இயற்றப்படாத சமூக சீர்திருத்தத்தச் சட்டங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

By

Published : Aug 2, 2021, 12:00 PM IST

Updated : Aug 2, 2021, 2:13 PM IST

சென்னை மாகண சட்டப்பேரவை

சென்னை மாகண சட்டப்பேரவை (Madras Legislative Council) 1921ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1919இன்படி அமைக்கப்பட்டது. இதன் காலம் மூன்றாண்டுகளாகும். மொத்தம் 132 உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பேரவையில், 34 பேர் ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் கூட்டம் ஜார்ஜ் கோட்டையில் (தற்போதைய தலைமைச் செயலகம்) நடைபெற்றது. 1937ஆம் ஆண்டு மேலவை, கீழவை என இரு அவைகள் கொண்ட முதல் சட்டப்பேரவை அமைந்தது.

அதைத்தொடர்ந்து, 1952ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி சட்டப்பேரவை அமைந்தது. அதன்படி சுதந்திர இந்தியாவில் முதல்முறையாகத் தேர்தல் நடைபெற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கருணாநிதி, ராம்நாத் கோவிந்த்

அதன்படி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1952ஆம் ஆண்டு அமைந்த முதல் சட்டப்பேரவையைக் கணக்கில்கொண்டு, 2012ஆம் ஆண்டு சட்டப்பேரவையின் வைரவிழாவைக் கொண்டாடினார்.

ஆனால், அதற்கு முன்னதாகவே 1989ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்ற 1937ஆம் ஆண்டை கணக்கிட்டு சட்டப்பேரவையின் பொன்விழாவைக் கொண்டாடினார்.

மேலும், 1996-2001 காலகட்டத்தல் முதலமைச்சராக இருந்தபோது, கருணாநிதி 1997ஆம் ஆண்டு பவள விழா (75 ஆண்டுகள்) மற்றும் வைர விழாவைக் (60 ஆண்டுகள்) கொண்டாடினார்.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1921ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தின் அடிப்படையில், நூற்றாண்டு விழாவை நடத்துகிறார். இதில், கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்து உரையாற்றுகிறார்.

இதில், மூன்று முதலமைச்சர் வெவ்வேறு காலங்களை கணக்கிட்டு விழா எடுத்து மக்களை குழப்பிவிட்டனர்.

சீர்திருத்தச் சட்டங்கள்

சாதியின் பெயரால் பார்ப்பனரல்லாத சமுதாயத்தினர்படும் இன்னல்களைக் களைக்க 1916ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில், சி. நடேசன், டி.எம். நாயர், பி.டி. தியாகராயர் ஆகியோர் நீதிக்கட்சியைத் தொடங்கினார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1919இன்படி நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று பல்வேறு சீர்திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியது. அதில், தேவதாசி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஆலய பிரவேச சட்டம் குறிப்பிடத்தக்கவை.

தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம்

தேவதாசிகள் முறை என்பது ராஜராஜ சோழன் காலத்தில் தோன்றியது. இந்த முறையில் பெண்கள் தாங்களாகவே விரும்பி கோயிலுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுதல், பெற்றோரால் கோயிலுக்கு அர்ப்பணித்தல், கோயிலில் நடனம் ஆடுதல் உள்ளிட்டவை அடங்கும். ஆனால், மன்னர்களாட்சி முடிவிற்கு வந்தபின் தேவதாசி முறை சீரழிவுக்கு ஆளானது.

தேவதாசி பெண்கள் வசதிபடைத்தவர்களின் இச்சைகளுக்காகக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களுக்குத் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் நீதிக்கட்சி, தேவதாசிகள் ஒழிப்புச் சட்டத்தைக் கையிலெடுத்தது. அதனை அப்போதையசட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி முன்மொழிந்தார். இது, சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தமாகவே கருதப்பட்டது.

ஆலய பிரவேச சட்டம்

1939ஆம் ராஜாஜி ஆட்சியில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின சமூகத்தினர் நுழையவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ராஜாஜி தடுக்கப்பட்ட அவர்களுடன் கோயிலுக்குள் நுழைந்தார். இந்த ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவுகள் கிளம்பின.

அதனடிப்படையில், சென்னை மாகாண சட்டப்பேரவையில் 1939ஆம் ஆண்டு ஆலய பிரவேச சட்டம் இயற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்டியலினத்தவருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்களைத் தடுக்கவும், அதனைச் செய்பவர்களைத் தண்டிக்கவும் தீண்டாமை ஒழிப்புச் சட்டம்1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இப்படி பல்வேறு சட்டங்கள் முதல் மதிய உணவு-சத்துணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி, இலவச மிதிவண்டி, மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் வரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

அதன் அடிப்படையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டை கடந்துள்ளது. இதனைச் சிறப்பிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்து இன்று மாலை பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்து உரையாற்றகிறார்.

இதையும் படிங்க:பேரவையில் கருணாநிதியின் உருவப்படம்: குடியரசுத் தலைவர் திறந்துவைப்பு

Last Updated : Aug 2, 2021, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details