தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கலந்தாய்வு நாளைமுதல் தொடங்கும் - மா.சு.

பல் மருத்துவ பட்ட மேற்படிப்பில் உள்ள 358 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் கலந்தாய்வு நாளைமுதல் (அக். 3) தொடங்கும் எனச் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : Oct 2, 2021, 4:48 PM IST

சென்னை: டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய நலவாழ்வு குழும ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்விற்கான ஆணை வழங்குதல் மற்றும் 2021-2022ஆம் ஆண்டிற்கான பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மா. சுப்பிரமணியன் ஊதிய உயர்வு அரசாணையைப் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கான (MDS) தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளரைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், "மருத்துவத் துறையில் ஒப்பந்தப் பணியாளர்களாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிசெய்து வருவோர்களுக்கு ஊதிய உயர்வாக 28 ஆயிரத்து 100 பேருக்கு ஆணை வழங்கியதால் 89 கோடி ரூபாய் அரசிற்கு கூடுதல் செலவாகிறது.

ஒன்றிய அரசு தரவுகளின்படி, 18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டில் ஐந்து கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 62 விழுக்காடு நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் இறுதிக்குள் 70 விழுக்காடு பேருக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 24 லட்சம் 93 ஆயிரம் பேர் தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டனர், அவர்களில் 10 லட்சம் பேர் இரண்டாம் தவணை செலுத்தியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடியே 23 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் சுமார் 14 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நாளை (அக். 3) நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் சுமார் 25 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த கையிருப்பு உள்ளது.

அதேசமயம் 2021-2022ஆம் ஆண்டிற்கான பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 358 இடங்களில் தனியார் கல்லூரியில் 296 இடங்களும், அரசு கல்லூரியில் 62 இடங்களும் உள்ளன. அதற்காக 1,018 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அதில் 964 தகுதியானவை எனக் கண்டறியப்பட்டது. அதற்கான கலந்தாய்வு நாளை (அக். 3) முதல் தொடங்கும். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய நான்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டே செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறையை வரும் 4ஆம் தேதி நேரில் சந்தித்துத் தேவையான ஆவணங்களை வழங்க உள்ளோம். பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 100 மருத்துவ இடங்கள் வழங்கியுள்ளன. தற்போது அவர்களிடம் 150 இடங்களாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'As I am attending Valagappu' - பிடிஆரை கலாய்த்த முன்னாள் 'கலகல' அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details