சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உயர் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்கல்வி பெற அனுமதி ஆணை வேண்டி இணை இயக்குனர் பணியாளர் தொகுதிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியாக கடந்த 2015 -16,2016-17,2017-18 ,2018-19 ஆம் கல்வி ஆண்டுகளில் விண்ணப்பிக்கபட்டது.
இணை இயக்குநர் அனுமதி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தவிர, மீதமுள்ள விண்ணப்பங்கள் அரசாணை எண் 101 ன்படி முதன்மைக்கல்வி அலுவலரின் அனுமதி வழங்கலாம் என்று இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
பல்வேறு நிர்வாக காரணங்களால் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இடமாறுதல் காரணமாக கடந்த ஆண்டுகளில் விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு முன் அனுமதி வழங்காமல் நிலுவையில் உள்ளது.