சென்னை:குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 14 வது ஊதிய ஒப்பந்த 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று (ஜூலை 11) நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களைசந்தித்து பேசிய அமைச்சர், 'கடந்த மே மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதில் குறிப்பாக, அடிப்படை ஊதிய நிர்ணயம் என்பது 31.08.2019 அன்று அவர்கள் பெற்றிருந்த ஊதியத்தில் 2% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு கணக்கீடு செய்து அந்த அடிப்படை ஊதியத்தில் 1.1.2022 முதல் 3% உயர்வ அளித்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சரின் சிறப்பு திட்டமான நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தில் அதிலே பணிபுரிகிற ஓட்டுநர், நடந்துனர் பேட்டா வழங்க கோரிக்கை ஏற்று நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. கரோனா காலகட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு சிறப்பூதியமாக 300 வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அதுவும் அறிவிக்கப்பட்டது.
ஒரு முறை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்று கொள்ளப்பட்டது. 1078 பணியாளர்களுக்கு தொழில்நுட்ப மேற்பார்வையாளர் போக்குவரத்து மேற்பார்வையாளர் பிரிவில் பதவி உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது.
படிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட தொகைகளில் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்து சலவை படி, தனி பேட்டா, ஸ்டேரிங் பேட்டா ரிஸ்க் அலவன்ஸ், ரீபிள் அலவன்ஸ், இரவு பணிப்படி, இரவு தங்கள் படி, இவையெல்லாம் அவிக்கப்பட்டன. அவ்வாறு அறிவிக்கப்பட்டதில் கடந்த முறை அறிவிக்கப்பட்டதை விட கூடுதலாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை இன்றைக்கு ஏற்று கொள்ளப்பட்டு அதில் சில உயர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அனைத்து போக்குவரத்து கழகங்களின் ஒரே வழிகாட்டுதலுக்கான நிலையாணை நடைமுறை படுத்த நிபுணர்கள் குழு அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்றைக்கு மலைவாழ் பகுதிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு மலைவாழ்படி வழங்கபடுவதை 3,000 ஆக உயர்த்தி பழங்கபடுவதென ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு, பங்கேற்ற காலங்களில் அவர்கள் பணிக்கு வந்ததாக கணக்கெடுக்கப்பட்டு ஏற்பட்ட விடுப்பு கணக்கில் கணக்கு செய்து அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படும் என இன்றைய பேச்சுவார்த்தையில் பேசி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முக்கிய கோரிக்கையான பே மேட்ரிக்ஸ் கோரிக்கை அரசு ஊழியருக்கும் போக்குவரத்து தொழிலாளருக்கும் ஊதிய விகித வித்தியாசங்கள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு சரிசெய்ய வேண்டிய சூழல் இருக்கிறது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதுகுறித்து முடிவெடுக்கப்படும்' என்றார்.
தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் எம்பி பேசுகையில், '14வது ஊதிய ஒப்பந்தம் 5ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம். பேச்சுவார்த்தை முடிவு பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஊதிய ஒப்பந்தத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்து தொழிலாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதனை சரி செய்ய வேண்டும் எனவும் வலிவறித்துள்ளோம். 5 % ஊதிய உயர்வை உயர்த்தி தருவதாக தெரிவித்துள்ளனர். அதை மேலும் உயர்த்தி தருவது பற்றி நாங்கள் ஆலோசித்து தெரிவிப்பதாக தெரிவித்துள்ளோம்.
மகளிர் இலவச பெருந்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு பேட்டா வழங்குவதாக கூறினார் அதிலும் சில மாற்றங்கள் உள்ளது அதை சரி செய்ய வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நமக்கு வர வேண்டிய வைப்பு நிதி ரூ.17 கோடியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம். கடந்த 5ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் இழுபறியாகவே உள்ளது.
கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிவர்த்தி செய்யபடவில்லை என்றால் கூட்டு குழு சார்பில் முதலமைச்சரை சந்திக்க உள்ளோம்' என்று தெரிவித்தார்.
அதேபோல் அண்ணா தொழிற்சங்க மாநில இணை செயலாளர் சூரிய மூர்த்தி பேசுகையில், 'இந்த பேச்சுவார்த்தை மன நிறைவை அளிக்கும் வகையில் எந்த வித கோரிக்கையும் நிறைவேற்றபடவில்லை, போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்தி சொன்னோம். அமைச்சர் இந்த கூட்டத்தில் அதை முடிவு செய்யமுடியாது முதலமைச்சரோடு பேசி விரைவில் அறிவிப்பதாக சொன்னார்கள்.
ஊதியத்தை பொறுத்த வகையில் அவர்கள் கையாளும் முறை ஏற்புடையதல்ல. பே மெட்ரிக்ஸ் ஊதியம் வழங்க வேண்டும். 2% ஒரு கால கட்டத்திற்கு, 3% ஒரு கால கட்டத்திற்கும் வழங்குவது பிரித்தாளும் சூழ்ச்சியை போல, ஊழியர்களுக்கு கெடுதல் செய்யும் அமைந்துவிடும்.அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முந்தைய ஊதிய குழுவில் வழங்கியதை போல பே மெட்ரிக்ஸ் முறையில் ஒவ்வொரு பணியாளருக்கும் ரூ.6,000 பயன்படும் வகையில் வழங்கவேண்டும் என்பதே கோரிக்கை.
போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுமோ என ஐயப்பாடு இருந்தது. அமைச்சர் உறுதியாக எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாகாது' எனக் கூறினார். அதற்கு அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
முன்னதாக இக்கூட்டத்தில், போக்குவரத்து துறை செயலாளர் கே.கோபால், நிதித்துறை இணை செயளாளர் அருண்சுந்தர் தயாளன்,
8 போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு உள்ளிட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
14 வது ஊதிய ஒப்பந்த 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இதையும் படிங்க: சாலையில் வலிப்பு வந்து துடித்த இளைஞர்; அக்கறையுடன் ஓடி வந்து உயிரைக் காத்த காவலர் - குவியும் பாராட்டு