சென்னை: தமிழ்நாட்டு கோயில்களிலுள்ள ஜெயமாலா, லஷ்மி உட்பட பல்வேறு 8 அஸ்ஸாம் யானைகளை மீட்டுச் செல்வதற்காக, மாநில வனத்துறை அலுவலர்கள் மற்றும் யானைகளை கையாளத் தகுந்த வல்லுநர்களை தமிழ்நாட்டிற்கு அனுப்ப அஸ்ஸாம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், அரசாங்க செலவில் தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களிலுள்ள அஸ்ஸாம் மாநில யானைகளைத் திரும்ப கொண்டு செல்ல வேண்டுமென திட்டம் வகுக்கப்பட்டது. இதனிடையே முன்னதாக, அஸ்ஸாம் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (பிசிசிஎஃப்) எம்.கே.யாதவா தமிழ்நாடு தலைமைச்செயலருக்கு இதுகுறித்து கடிதம் வாயிலாக தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு இன்று (செப்.1) கூறுகையில், 'இன்று தான் அஸ்ஸாம் யானைகள் குறித்து தமிழ்நாடு தலைமை வன பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு, இது சம்பந்தமான செய்திகளை சேகரிக்க உத்தரவிட்டுள்ளோம்' என்று கூறினார்.
திருவில்லிபுத்தூரில் உள்ள ஜெயமாலா என்ற அஸ்ஸாம் மாநில யானை மேலும், இதுகுறித்து தமிழக தலைமை வனப்பாதுகாவலர் கூறுகையில், 'அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து இது சம்பந்தமாக கடிதம் ஒன்றை பெற்றுள்ளோம். மேலும் அஸ்ஸாம் மாநில வன அலுவலர்கள் நாளையோ அல்லது நாளை மறுநாளோ வரவில்லை எனக் கூறியுள்ளார்கள். இது தொடர்பாக தமிழ்நாட்டில் ஒன்பது யானைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். எனவே, இதனை ஆய்வு செய்த பின் நாம் அஸ்ஸாம் மாநிலத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்புவோம்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் மழையில் அழுகும் ரோஜாக்கள்... பராமரிக்க நடவடிக்கை தேவை