தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடியரசு தின விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு- தமிழ்நாடு அரசு - கூட்டத்தைத் தவிர்க்கவும்

கரோனா தொற்று பரவும் என்பதால் நாளை ஜன.26 ஆம் நாள் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

குடியரசு
குடியரசு

By

Published : Jan 25, 2022, 4:01 PM IST

சென்னை: வேகமெடுக்கும் கரோனா தொற்றால் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் முதியவர்கள், குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் குடியரசு தினவிழாவில் பங்கேற்க வேண்டாம் எனத் தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டந்தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அலுவலர்கள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தைத் தவிர்க்கவும்

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு ஆளுநர் ஜன.26ஆம் நாள் காலை 8.00 மணிக்குத் தேசியக் கொடியினை ஏற்றிச் சிறப்பிப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.

அதன்படி, கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அலுவலர்கள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குடியரசுதின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவைக் காண நேரில் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குடியரசுதின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி அனுமதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details