புதிய கட்டுப்பாடுகள்
கரோனா தொற்றின் பரவல் காரணமாக இன்று முதல் அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்.
- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.
இரவு நேரத்தில் முழு ஊரடங்கு ( இரவு 10 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை)
இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்! - அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டும் பணி செய்ய அனுமதி. அரசு ஊழியர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.
- பயணியர் ரயில், மெட்ரோ ரயில், அரசு பேருந்து, தனியார் பேருந்து ஆகியவற்றில் 50 விழுக்காடு பயணிகள் மட்டுமே அனுமதி.
- 3,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய கடைகளுக்குத் தடை.
- பால், மருந்து கடைகள் இயங்க, எந்த தடையும் கிடையாது.
கரோனா பரவல் - புதிய கட்டுப்பாடுகள்! - மளிகை, காய்கறிக் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் இயங்கும்.
- உணவகங்கள், பேக்கரிகள் அனைத்து நாட்களிலும், காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை; பகல், 12:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை; மாலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை செயல்படலாம்; பார்சல் வழங்க மட்டும் அனுமதி.
- டீக்கடைகள், அனைத்து இறைச்சி, மீன், கோழிக்கறி கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகல் 12:00 மணி வரை மட்டும் திறந்திருக்கும்.
சுற்றுலாவுக்கு தடை
- கொடைக்கானல், ஊட்டி, மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களைப் பொதுமக்கள் பார்வையிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- டீக்கடைகளிலும் பார்சல் வழங்க மட்டும் அனுமதி, மற்ற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, அனைத்து நாட்களிலும் அனுமதி இல்லை.
- திரையரங்குகள், கலாசார செயல்பாடுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டு, திருவிழாக்கள் எதற்கும் அனுமதி கிடையாது.
இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்! அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் (Recreation Clubs), அனைத்து மதுக்கூடங்கள் (All Bars), பெரிய அரங்குகள் (Auditoriums) , கூட்ட அரங்குகள் (Meeting Halls) போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள் ( Big format Shops ), வணிக வளாகங்கள் ( Shopping Complex & Malls ) இயங்க அனுமதி இல்லை.
- அனைத்து மின் வணிக சேவைகள் (e - commerce) வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
- இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் (IT companies) குறைந்தபட்சம் 50 விழுக்காடு பணியாளர்கள் கண்டிப்பாக வீட்டிலிருந்தே பணிபுரிய (Work from Home ) வேண்டும்.