தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்கு குறித்து அரசே முடிவு செய்யும்: சத்யபிரத சாகு - சத்யபிரத சாகு

சத்யபிரத சாகு
சத்யபிரத சாகு

By

Published : Apr 29, 2021, 12:48 PM IST

Updated : Apr 29, 2021, 2:38 PM IST

12:43 April 29

சென்னை: மே 1, 2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து அரசு முடிவுசெய்யும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்கு எண்ணிகை தொடர்பான விவரங்களை அரசுக்கு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “மே 2ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை தமிழ்நாடு அரசுக்குத் தெரிவித்துள்ளோம். தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கரோனா பரிசோதனையில், தொற்று இல்லை என்று சான்றிதழ் வந்தாலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்குள் நுழையும் போது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். அப்போது 98.6 டிகிரிக்கு மேல் உடல் வெப்பநிலை இருந்தால், அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணியில் 16,387 பேர் ஈடுபட உள்ளனர். தொகுதிகள், அதிகாரிகளின் எண்ணிக்கையைப் பொருத்து வாக்கு எண்ணப்படும் மேசைகளின் எண்ணிக்கை மாறுபடலாம்.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வரும் மே 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து அரசுதான் முடிவு செய்யும்” என்று கூறியுள்ளார். 

முன்னதாக, மே 1, 2ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 29, 2021, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details