தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை வெளியிடும் தமிழ்நாடு அரசு - Tamil Nadu government to release white paper on August 9

தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை வெளியிடப்போவதாக தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Aug 5, 2021, 6:13 AM IST

2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் நிதி செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கையை வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து விரிவான பார்வை கிடைக்கும்.

இந்த அறிவிப்பு தொடர்பான செய்திக் குறிப்பை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் வெளியிட்டுள்ளார்.

மேலும், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் அரசாணை

ABOUT THE AUTHOR

...view details