இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
பேனர் வைக்க தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்: திருநாவுக்கரசர் - should be ban banner
சென்னை: பேனர் வைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
திருநாவுக்கரசர்
பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிமுக பேனர் விழுந்ததில் நிலை தடுமாறிக் கீழே விழுந்து, பின்னால் வந்த தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசு உடனடியாக பேனரை வைப்பதை ரத்து செய்வது மட்டுமல்லாமல், இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காதவாறு முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.