தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்! - தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் ஐந்து ஐஏஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu Government
Tamil Nadu Government

By

Published : Nov 4, 2020, 7:58 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெளியுறவுத்துறையில் பயிற்சி முடித்த ஹர்சஹாய் மீனா ஐஏஎஸ், நிர்வாக சீர்திருத்த துறையின் செயலராகவும், மகப்பேறு விடுப்பில் இருந்த பத்மஜா ஐஏஎஸ், பெரம்பலூர் சார் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் தனிப்பிரிவில் சிறப்பு அலுவலராக இருந்த பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு துறையின் இயக்குநர், மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு புவியியல், சுரங்கம் மற்றும் தாதுக்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சரவணவேல்ராஜ் ஐஏஎஸ், முதலமைச்சரின் தனிப்பிரிவில் சிறப்பு அலுவலராகவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்த சுப்ரமணியன் ஐஏஎஸ், சுரங்கம் மற்றும் தாதுக்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details