சென்னை: சிறந்த இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்க தேர்வுக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதில், "இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும், விளிம்புநிலையில் மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு, ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருதுடன் ஐந்து லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விருது ஆண்டுதோறும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி விருது வழங்கப்படும். கலைஞர் எழுதுகோல் விருதுக்குத் தகுதியான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, விருதாளரைத் தேர்வுசெய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.