சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அக். 4ஆம் தேதி முதல் அக் 9ஆம் தேதிவரை டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும் என தமிழ்நாடு தேர்தல ஆணையம் கேட்டுக்கொண்டதன் பேரில் தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.