தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு - Instruct schools to record classes online

ஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு
ஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு

By

Published : May 26, 2021, 7:14 PM IST

Updated : May 26, 2021, 8:23 PM IST

19:10 May 26

ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடுகள்

சென்னை, பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைனில் வகுப்பில் ஆபாசமாக நடந்து கொண்டதாக எழுநத் புகாரை அடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது விஸ்பரூபமெடுத்து நிலையில் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினரும்  கண்டனம் தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். அவை பின்வருமாறு,  

  • ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் அவற்றை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.
  • அவ்வாறு பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை அவ்வப்போது பெற்றோர்  ஆசிரியர் சங்க பிரதிநிதிகள்ஆய்வு செய்ய வேண்டும்.  
  • மாணவ, மாணவியர்கள் அளிக்கும் ஆன்லைன் வகுப்புகள்  தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஆன்லைன் வகுப்பில் முறையற்ற வகையில்  நடந்து கொண்டால்  அவர் மீது நிச்சயம் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புகார் மாணவ, மாணவியர் புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் உருவாக்கப்படும்.
Last Updated : May 26, 2021, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details