தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மழை, வெள்ள பாதிப்பு: 3 மாவட்டங்களுக்கு கூடுதல் அலுவலர்கள் நியமனம் - special offices on flood management

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க ராணிப்பேட்டை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு கூடுதல் அலுவலர்களை நியமனம்செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

3 மாவட்டங்களுக்கு கூடுதல் அலுவலர்கள் நியமனம்
வடகிழக்கு பருவமழை

By

Published : Nov 28, 2021, 11:16 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "அரசால் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், மூன்று மாவட்டங்களில் செயல்படுத்திவரும் சிறப்புத் திட்டங்களைக் கண்காணிப்பார்கள். தேவைப்படும்பட்சத்தில் அறிவுரைகளை மாவட்ட அலுவலர்களுக்கு வழங்கவும், திட்டத்தில் உள்ள சிக்கல்களை நீக்கி விரைந்து நிறைவேற்றுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை மேற்பார்வையிட்டு மீட்புப்பணி, நிவாரணம், மறுகுடியமர்வு உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சிறப்பு அலுவலர் சம்பத் குமாரையும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு தொழில் துறை இயக்குநர் தாமஸ் வைத்யனையும், வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் நந்தகுமாரையும் (ஐஏஎஸ்) நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details