தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதி - அமைச்சர் ராமசந்திரன் அறிவிப்பு - Rs 10 lakh fund for Kannaiya family who died in fire

சென்னை, ஆர்.ஏ புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கண்ணையாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிதி அறிவித்துள்ளது.

கண்ணையா
கண்ணையா

By

Published : May 9, 2022, 5:26 PM IST

Updated : May 9, 2022, 6:02 PM IST

சென்னை:சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோவன் தெருவில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிகாரிகள் ஆர்.ஏ புரத்தில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வந்த கண்ணையன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ மயிலை வேலு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், உச்சநீதிமன்ற தீர்ப்பு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கேட்கும் இடங்களிலேயே மாற்று வீடுகள் வழங்கப்படும் என்றும், உயிரிழந்த கண்ணையாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு - நடந்தது என்ன?

Last Updated : May 9, 2022, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details