தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு - மாணவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

holidays for school students
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

By

Published : Jan 16, 2022, 4:05 PM IST

சென்னை: கரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிகரித்து வரும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.

தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் மம்மூட்டிக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details