சென்னை:தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, மாநிலம் முழுவதிலும் இருந்து 396 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தொடக்க நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 171 பேர், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 171 பேர், மெட்ரிக் பள்ளிகள் மாவட்டத்திற்கு ஒன்று என்ற கணக்கில் 38 பேர், ஆங்கிலோ இந்திய பள்ளி ஆசிரியர்கள் 2 பேர், சமூக பாதுகாப்புத் துறை பள்ளி ஆசிரியர்கள் 2 பேர், மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர்கள் 2 பேர் ஆகியோர் அடங்குவர். அதோடு மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சியின் நிறுவனத்தின் சார்பில் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - award given by the Central Government
தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, மாநிலம் முழுவதிலும் இருந்து 396 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Etv Bharat396 ஆசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது- தமிழக அரசு
இவர்களுக்கு ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும். அதேபோல மத்திய அரசு வழங்கும் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்கப்படுகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை