தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.
தமிழ்நாடு தேர்தல்: வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு - தமிழ்நாடு தேர்தல் 2021
07:59 May 02
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு முழுவதும் 75 மையங்களில் நடக்கிறது. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மின்னணு எந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அலுவலரால் வெளியிடப்பட்டுவருகின்றன.