இதுதொடர்பாக, தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் மிக முக்கியமானது தகுந்த இடைவெளியாகும். இதை உணராமல் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட், கேரம் போர்டு போன்றவற்றை பலபேர் சேர்ந்து விளையாடும் குழு விளையாட்டுக்களை விளையாடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
இத்தகையவர்களை கண்டறிய தமிழ்நாடு காவல்துறை "கேமரா" பொருத்தப்பட்ட "ட்ரோன்" மூலம் கண்காணித்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. "ட்ரோன் கேமரா" காட்சிகளை நகைச்சுவை கலந்து தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றனர். இது காவல் துறை எடுத்துவரும் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை குறைத்து, நகைச்சுவைச் செய்தியாகிவருகிறது.