சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 பேர் உயிரிழந்துள்ளனர். 24 ஆயிரத்து 576 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் மொத்தமாக பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 33 லட்சத்து 75 ஆயிரத்து 329ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கரோனா... 14,013 பேருக்கு உறுதி... - chennai covid cases hike
தமிழ்நாட்டில் மேலும் 14,013 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
![தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கரோனா... 14,013 பேருக்கு உறுதி... tamil-nadu-covid-positive-cases-on-feb-2-2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14354090-thumbnail-3x2-l.jpg)
அதேபோல, குணமடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்து 59 ஆயிரத்து 694ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 636ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 66 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 6 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 13 பேருக்கு நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களாக உச்சமடைந்த கரோனா தொற்று, கடந்த வார இறுதியில் இருந்து குறைந்துவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'சிறார்களுக்கு 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும்'