சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,310 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,374 பேர் குணமடைந்தனர். 10 பேர் உயிரிழந்தனர்.
அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 40 ஆயிரத்து 531ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 75 ஆயிரத்து 281ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 956ஆகவும் அதிகரித்துள்ளது.