தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் நான்காயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு நான்காயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

tamil-nadu-covid-cases-on-feb-9-2022
tamil-nadu-covid-cases-on-feb-9-2022

By

Published : Feb 9, 2022, 8:58 PM IST

சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,971 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து 473 பேர் குணமடைந்துள்ளனர். 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 24 ஆயிரத்து 476ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை, 33 லட்சத்து 9 ஆயிரத்து 32ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 837ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து மூன்று பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக இதுவரை 6 கோடியே 17 லட்சத்து 28 ஆயிரத்து 842 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சென்னையில் 742 பேருக்கும், கோயம்புத்தூரில் 726 பேருக்கும், திருப்பூரில் 245 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நாட்டில் புதிதாக 71,365 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details