சென்னை:இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,104 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 21,027 பேர் குணமடைந்துள்ளனர். 13 பேர் உயிரிழந்தனர். அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 986ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஐந்தாயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு - active cases in tamilnadu today
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்தாயிரமாக குறைந்தது.
அதேபோல, 32 லட்சத்து 72 ஆயிரத்து 322ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 772ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 773 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 6 கோடியே 15 லட்சத்து 14 ஆயிரத்து 687 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களைவிட சென்னை, செங்கல்பட்டில், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 6,120 பேருக்கு கரோனா