சென்னை: இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,916 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 21 ஆயிரத்து 435 பேர் குணமடைந்தனர். 30 பேர் உயிரிழந்தனர். அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்து 97 ஆயிரத்து 238ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்து 4 ஆயிரத்து 213ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,696ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா - chennai covid cases in 2022
தமிழ்நாட்டில் மேலும் 9,916 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
tamil-nadu-covid-cases-on-feb-4-2022
கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 211 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக இதுவரை 6 கோடியே 11 லட்சத்து 68 ஆயிரத்து 370 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 1,475 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,624 பேருக்கும், திருப்பூரில் 857 பேருக்கும், செங்கல்பட்டில் 983 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பாளர்கள் 4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில்