தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் 1218 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று மட்டும் 1218 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

tamil nadu covid 19 bulletin on october 17
tamil nadu covid 19 bulletin on october 17

By

Published : Oct 17, 2021, 11:10 PM IST

சென்னை: அக்டோபர் 17ஆம் தேதிக்கான கரோனா தொற்று விவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், "ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 843 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதிதாக 1218 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 15 பேர் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 686 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 26 லட்சத்து 87 ஆயிரத்து 92 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 14 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணம் அடைந்த 1411 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 36 ஆயிரத்து 379 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் ஒன்பது நோயாளிகளும் என 15 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 35,899 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  1. சென்னை - 5,52,773
  2. கோயம்புத்தூர் - 2,44,968
  3. செங்கல்பட்டு - 1,70,479
  4. திருவள்ளூர் - 1,18,784
  5. ஈரோடு - 1,03,286
  6. சேலம் - 99,049
  7. திருப்பூர் - 94,376
  8. திருச்சிராப்பள்ளி - 76,913
  9. மதுரை - 74,979
  10. காஞ்சிபுரம் - 74,515
  11. தஞ்சாவூர் - 74,682
  12. கடலூர் - 63,813
  13. கன்னியாகுமரி - 62,138
  14. தூத்துக்குடி - 56,125
  15. திருவண்ணாமலை - 54,705
  16. நாமக்கல் - 51,557
  17. வேலூர் - 49,660
  18. திருநெல்வேலி - 49,196
  19. விருதுநகர் - 46,213
  20. விழுப்புரம் - 45,699
  21. தேனி - 43,531
  22. ராணிப்பேட்டை - 43,290
  23. கிருஷ்ணகிரி - 43,318
  24. திருவாரூர் - 41,110
  25. திண்டுக்கல் - 32,980
  26. நீலகிரி - 33,304
  27. கள்ளக்குறிச்சி - 31,217
  28. புதுக்கோட்டை - 30,021
  29. திருப்பத்தூர் - 29,193
  30. தென்காசி - 27,318
  31. தர்மபுரி - 28,167
  32. கரூர் - 23,832
  33. மயிலாடுதுறை - 23,155
  34. ராமநாதபுரம் - 20,502
  35. நாகப்பட்டினம் - 20,850
  36. சிவகங்கை - 20,039
  37. அரியலூர் - 16,797
  38. பெரம்பலூர் - 12,018
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1027
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1085
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ABOUT THE AUTHOR

...view details